Sunday, October 6

கரவெட்டி தச்சன்தோப்பு சிந்தாமணி – விநாயகர் கோயில்

0

கோயிலின் தென்மேற்கு மூலையி ல ;ஞானியார் ஒருவர் சிறுகுடில் அமைத்து வழிபாடுசெய்து வந்தார். அக்காலத்தில் வாழ்ந்த சுப்பர்சிதம்பரநாதன் என்பவருக்கு விநாயகர் கனவில்தோன்றி தனக்கு ஆலயமமைக்குமாறு கூறியதாகவும் இதற்கமைவாக இராசநாயகமுதலியார் மகள் வள்ளியார் பெண் மீனாட்சியம்மை பேரிலிருந்த 32 பரப்புக் காணியில் 1862 ஆம் ஆண்டு சிறுகோயிலாக அமைத்து விநாயகரை வழிபட்டு வந்ததாகவும் 1950களில் ஆலயத்திiனைப் பொறுப்பேற்ற சம்பந்தர் என்பவர் ஆலயத்தினை சிறப்பாக அமைக்க முற்பட்டு சிதம்பரத்திலிருந்து சிறந்த சிற்பாசாரியார்களைக் கொண்டு மூலஸ்தானம் முதல் கருங்கல் திருப்பணியை ஆரம்பித்தார். இதன் பயனாக கோபுரவாசல் முதல் மூலஸ்தானம் வரை கருங்கல் சிற்பவேலைப்பாடுகளுடன்கூடிய ஆலயமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிதம்பரப்பிள்ளை கந்தப்பு என்பவரது இறப்பின் பின்னர் உறவினர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நீதிமன்றம் வரை சென்று குடும்ப ஆதிக்கத்தில் இருந்த கோவில் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் பொதுக் கோயிலாக பிரகடனப்படுத்தப்பட்டமையும் சம்பந்தப்பிள்ளை என்பவரது காலத்தில் 25 நாட்களாக நடைபெற்ற திருவிழாவினை 10 நாள் உற்சவமாகக் குறைத்துதற்பொழுது மகோற்சவம ; நடைபெற்றுவருகின்றது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!