1830 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட உறுதியின் பிரகாரம் இவ்வாலயத்தின் வரலாறு பதியப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களால் கந்தபுராணத்திற்கு ஸ்ரீபயன்சொல்லும் முறை ஆரம்பித்து வைக்கப்பட்டதாகவும் இவரின் தொடர்ச்சியாக பண்டிதர் சிவக்கொழுந்து அவர்கள் செயற்படுத்தி வந்ததாகவும் அறியமுடிகின்றது. 1939 ஆம் ஆண்டு முதலாவதாக சித்திரத்தேர் ஓடும் வைபவம் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதம் வருடப் பிறப்பன்று தேர்த்திரு விழாவரும் வகையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பதினெட்டு நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.