Sunday, June 16

நாகராஜன், அநு.வைரமுத்து

0

சங்கராபரணம் தென்மயிலை தெல்லிப்பளையில் வாழ்ந்த இவர் 1933.09.07 ஆம் நாள் உடுப்பிட்டியில் பிறந்தவர்.4{55ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பு 6 என்னும் முகவரியில் தற்காலிகமாக வாழ்ந்தவர். சமயம், சிறுவர் இலக்கியம், கவிதை, ஆக்க இலக்கியம், நடிப்பு, நெறியாளுகை, தயாரிப்பு, விஞ்ஞான ஆய்வு என பலதுறைகளில் ஆக்க இலக்கியப் புலமையுடைய வர். நாடறிந்த மூத்த எழுத்தாளர். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் கால் பதித்தவர். புதுமையும் நயப்பும்மிக்க இவரது ஆக்கங்கள் இலக்கிய உலகில் பிரசித்தமானது. மரபு இலக்கியத்திலும், ஆக்க இலக்கியத்திலும் முன்னோடியாகத் தொழிற்பட்டவர்.தெல்லிப்பளை கலை இலக்கியக் களத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகப் பணியாற்றி பதினாறிற்கும் மேற்பட்ட ஆக்க இலக்கிய நூல்களை வெளியிட்டவர். ஆசிரியராகவும், அதிபராகவும் கல்வியியலாளராகவும் முப்பத்தேழு வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவரது வைரமான் வெளியீடான கருத்தும் எழுத்தும் என்னும் நூல் பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது ஒரு காலத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலில் அபலையின் கடிதம், இளையாள், ஒருபிடிமண், வீணையடி நான் உனக்கு, சுரண்டலின் நிழல்கள், நாமும் ஈன்றிருக்கிறோம், கவசம், அதுவும் ஒரு பிறவி, ஒருசாலை திரும்புகிறது, ஒரு புல்லாங்குழல் வீணையாகிவிட்டது, துரோகங்கள் எப்பொழுதும் நியாயப்படுவதில்லை ஆகிய சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சிறுகதைகள் யாவும் தினகரன், சுதந்திரன், வீரகேசரி, அன்னை, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் 1955ஆம் ஆண்டிலிருந்து 1985ஆம் ஆண்டு வரை வெளிவந்த சிறுகதைகளாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சமய,சிறுவர் இலக்கியங்களில் தேசிய, மாகாண விருதுகளும், பாராட்டுக்களும் கௌரவ மும் பெற்ற மூத்த எழுத்தாளர். மார்கழி மங்கையர், மாணவர் நல்லுரைக் கோவை, தாய் தரும்தாலாட்டு, தேடலும் பதித்தலும், காட்டில் ஒரு வாரம், அவன் பெரியவன், பட்டரின் அபிராமி மான்மியம், சிறுவர் சிந்தனைக் கதைகள் போன்ற நூல்களின் ஆசிரியராகவும், மாத – முத்திங்கள் இதழாக அன்னை என்ற இலக்கியச் சஞ்சிகையை 1950-1963 வரையான காலப்பகுதியில் நடத்தியும் ஈழத்து இலக்கிய உலகில் தடம்பதித்த சிறப்பான படைப்புகளால் சிகரங்களைத் தொட்டவர். இதனால் இலக்கிய அமைப்புகளின் அங்கீகாரத்தினைப் பெற்றதோடு விருதுகள் பரிசில்கள் மற்றும் பாராட்டுக்களையும் பெற்றவர். வலிகாமம் வடக்கின் மூத்த ஆக்க இலக்கியப்புலமையாளர்களில் ஒருவராகிய இவர் 2012-08-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!