யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் 1907-01-07 ஆம் நாள் பிறந்தவர்.மிகச்சிறந்த உரைநடையா சிரியர் என்பதுடன் தலைசிறந்த கவிஞனுமாவார். இவரால் எழுதப்பெற்ற தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடடுமல்லாது, தமிழை ஒரு பாடமாகப் பயிலுகின்ற அத்தனை மாணவர்களினதும் இலக்கிய அறிவின் பாடத்திட்டத்திற்கான விதந்துரைக்கப்பட்ட பாட நூலாகத் திகழ்கின்றமை குறிப்பிடத் தக்கது. 1973 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.