1908-10-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். மக்கள் கவிமணி எனப்போற்றப்பட்ட இவர் யாழ்ப்பாண மண்வாசனையைப் பாடிய கவிஞன். அவரது பாடல்கள் காலத்தால் என்றும் அழியாதவை. இன்றும் மணம் வீசிக்கொண்டிருக்கும் “மாடுமோ செத்தல் மாடு” என்ற பாடலடிக்குச் சொந்தக்காரர். பாடப்புத்தகங்களில் இப்பாடல்கள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.1974-08-01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.