Tuesday, April 15

அழகு, சுப்பிரமணியம்

0

1910-15 ஆம் நாள் யாழ்ப்பாணம், உடுப்பிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத ;துறையில் உலகப் புகழ்பெற்ற இலங்கையர். சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். நீண்டகாலமாக இங்கிலாந்தில்  வாழ்ந்த இவர் “Indian Writing” என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராகவும் “இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்” இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். இவருடைய இலக்கியப் படைப்புகள் ஜேர்மன், பிரெஞ்சு, மொழிகளிலும் பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. “The Big Girl” என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பு 1964 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு Closing Times & Other Stories இவருடைய மறைவுக்குப் பின்னர் இவரது மனைவி திருமதி செல்லக்கண்டு அழகு சுப்பிரமணியம் அவர்களால் வெளியிடப்பட்டது. இவரது ஒரே நாவலான ஆளைவநச ஆழழn இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது. ஆனால் இதன் தமிழாக்கம் மல்லிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. LovelyDay என்ற சிறுகதை ‘மிகச்சிறந்த இந்தியச் சிறுகதைகள்’என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. The Mathematician என்ற சிறுகதை “உலக இலக்கியத்தின் உந்நதச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் ஹைடல்பேர்க் நகரில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவருடைய 12 சிறுகதைகள் ராஜஸ்ரீகாந்தன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு “நீதிபதியின் மகன்” என்ற தலைப்பில் நூலாக 1999 இலும் 2003 இலும் இரண்டு பதிப்புகளாக வெளிவந்தது. 1973-02-15 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!