இற்றைக்கு 160 வருடங்களுக்கு முன்பழனியர் பெரியதம்பி பெண் தெய்வானை என்ற குடும்பத்தினர் வாழ்ந்த காணியில் தெய்வானை உக்கிரமாகக் கலையாடி வந்தபோது கணவரிடம் குறித்த காணியின் வடக்குப் பக்கமாக அமர்ந்து சிறுகுடில் அமைத்து தன்னை ஆதரிக்கு மாறு வேண்டியதற்கமைவாக சிறுகுடில் அமைத்துவழிபட்டு வந்தனர். நாளடைவில் அயலில் உள்ளவர்களும் வழிபடலாயினர். வேள்வி நடத்துவதற்கு விரும்பியதால் பொங்கல்மடை வைத்து வேள்வினை நடத்தி வந்தனர். வேள்வியினை நடத்துவோரால் ஏற்பட்டபிரச்சினை காரணமாக 1952 இல் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாவதாக வேள்வி நிறுத்தப்பட்டது. பின்னர் மடாலயமாக அமைத்துபரிவார மூர்த்திகளும் அமைக்கப்பட்டது. 1998 இல் பாலஸ்தானம் செய்து 2005 தை திருவாதிரை நட்சத்திரத்தில் மஹா கும்பாபிN~கம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டிலிருந்து மாசி மகத்தினை இறுதிநாளாகக்கொண்டு பதினைந்து தினங்கள் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது . திருவிழாவின் பின்னர்பழைய மரபின்படி காத்தவராயன் சுளகுமடை நடைபெறுவதும் இவ்வாலயத்தின் சிறப்பம் சங்களில் ஒன்றாகும்