Thursday, January 16

சிவகாமி அம்பாள் திருக்யோயில் – கோண்டாவில் கிழக்கு,தில்லையம்பதி.

0

1850 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணாம்புச் சூளைகள் சூழ மாமர நிழலில் மூதாதையர்களால் பராமரிக்கப்பட்டு வந்தாலும் இவ்வூரைச் சேர்ந்த வேலன் என்னும் பெரியவரால் அம்பிகையின் ஆலயம் தோற்றம் பெற்றது எனலாம். ஆரம்ப காலத்தில் ஆலயம் ஒரு சிறுதுண்டுக் காணியில் பெருவிருட்சமாகக் காணப்பட்ட ஒரு மரத்தின்கீழ் ஒரு கல்லை அன்னையின் வடிவமாக வைத்து ஓர் ஓலைக்கொட்டகையின் கீழ் நான்கு பக்கமும் அரைச் சுவர் வைக்கப்பட்டு கீழ் நிலம் பசுவின் சாணம் கொண்டு மெழுகிடப்பட்டு கோயில் முன் வாயில் கிறாதிப்படலை கொண்டு பாதுகாக்கப்பட்டது. 1855 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசாரசீலரான வேலன் என்பவர் அன்னையின் ஆலயத்திற்கு விளக்கு வைத்து வழிபடத் தொடங்கினார். இக்காலப்பகுதியில் தான் கருங்கல்லினாலான அம்பிகையின் திருவுருவ விக்கிரகம் கோயிலில்வைக்கப்பட்டது. 1910 இல் இவ்வாலயம் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டு மேற்கூரையுடன் பதினைந்தடி விஸ்தீரணம் கொண்ட ஆலயமாக புதுப்பொலிவு பெற்றது. 1959இல்தர்மபரிபாலன சபை உருவாக்கப்பட்டது. 1962 இல் ஒன்றுகூடிய இவ்வூர் மக்கள் இவ்வாலயத்தினை திருப்பெருங்கோயிலாக அமைப்பதற்கு முன்னின்றுழைத்தனர். இதன் தொடர்ச்சியாக 1965 ஆனி மாதம் முதலாவது கும்பாபிN~கம் நிறைவேறியது. இத்தினத்திலிருந்து பேய்ச்சி அம்மன் என்ற பெயருடன் விளங்கிய இவ்வாலயம் சிவகாமி அம்பாள் ஆலயம் என மாற்றம் பெற்றது.1966 இலிருந்து வைகாசி விசாகத்தினைமுன்னிட்டு பத்து தினங்கள்அலங்கார உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் அலங்கார உற்சவமானது 1976-06-03 ஆம் நாளிலிருந்து மகோற்சவப் பெருவிழாவாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பல ஆண்டுகளிலும் ஆலயப் புனருத்தாரன வேலைகள் நடைபெற்று ஆலயம் இன்றைய வளர்ச்சிநிலையினை அடைந்ததெனலாம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!