ஆரம்பகால தமிழ் மன்னர்களது நிர்வாகப்பிரிவில் இணுவில் பெரும்பாகப் பொறுப்பேற்ற திருக்கோவலூர் பேராயிரவன் தான் வாழ்ந்த இணுவில் கிழக்கு என்ற இடத்தில் தென்னிந்தியா விலிருந்து சிவகாமி அம்பாளின் கருங்கல்லினாற் செதுக்கப்பட்ட முழு உருவச் சிலையைத் தருவித்து ஆலயம் அமைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.சிதம்பர வளவு என்றழைக்கப் படும் இடத்தில் பதின்நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமைக்கப்பட்டதாகும். பேராயிரவனிற்குப் பின்னர் வந்த காலிங்கன் என்பவனாலும் இவ் வாலயம் வழிபடப்பட்டு வந்துள்ளது. அந்நியர் ஆட்சியில் அழிவடைந்த ஆலயம் பக்தர்களது உதவிகளோடு புனருத்தாரனம் செய்யப்பட்டு இன்றைய நிலையினை அடைந்ததெனலாம். பங்குனி மாத உத்தர நட்சத்திரமன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத்துடன் பன்னிரு திருவிழாக்கள் நடைபெற்றுவருகின்றன.
