திருநெல்வேலிச் சந்தியிலிருந்து கல்வியங்காடு செல்லும் ஆடியபாதம் வீதியில் ஆண்டிப்புலம் என்னும் தோப்புப் பெயர் கொண்ட காணியில் இவ்வாலயம் அமைந்திருக் கின்றது.1844 ஆம் ஆண்டு பதிவின் பிரகாரம் ஓடு போட்டுவேயப்பட்ட கூரையுடையதும் தின மும் ஒருநேரப பூசையுடையது என்றும் அறியமுடிகின்றது. 1951ஆம் ஆண்டு முதன் முதலாக சித்திராப் பூரணையினை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பதினைந்து தினங்கள் ஒவ்வொரு வருடத்திலும் நடைபெற்று வருகின்றது. 1969இல் பாலஸ்தானம் செய்யப்பட்டு 1971 இல் முதலாவது கும்பாபிN~கம் நடைபெற்றது.1988 இல்தேர்த் திருப்பணிச்சபை உருவாகி புதிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டது. மீண்டும் 1998 இல் ஆலயம் புனருத்தாரனம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
1 Comment
nice artical