மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம்என்னும் சிறப்புக்களைக் கொண்ட தான்தோன்றியான காளியம்பாள் வீற்றிருக்கின்ற திருக்கல்லின் அருகே வளந்தான்புலம் என்ற பெயரைக் கொண்ட காணியில் ஊர்மக்களின் உதவியுடன் நடராசப் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தனர் எனவும் இப்பொழுது மூலஸ்தானத்தில் மகாஸ்ரீ கணபதிப்பிள்ளையாரே எழுந்தருளியிருக்கின்றார். வளந்தான்புலம் என்ற பெயருடைய இவ்வாலயக் காணியானது கந்தர் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தமையால் காலப்போக்கில் வளந்தான்புலம் கந்தர்வளவு என்ற பெயரில் அழைக்கப்பட்டு இவ்வாலயப் பெயராகஸ்ரீ நிலைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் காளி கோயில் என்றே ஊர்மக்களால் அழைக்கப்பட்டு வருவதும் இதன் சிறப்புக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடத்திலும் ஆவணி மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். 2013 இல் பஞ்சதளக்கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 2014 இல்மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தின் மேலதிக தகவல்களை உள்ளிடுங்கள்