கி.பி. 1750ஆம் ஆண்டில் அமரர் நாகர்கதிர்காமர் என் பவரால் வைரக்கற்களைக்கொண்டு கட்டப்பட்டு அவராலேயே பூசைகளை யும் நடத்தி வந்ததாக வரலாற்றில் பதியப்பட்டிருந் தாலும் அத்தாய்வளவு என்ற பெயருடைய இவ்வாலயத்தின் ஆதனத்தில் குறிப்பிட்டபடி இவ்வாலயமானது 65 பரப்பளவில் அமைந்திருந்த தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பூசை வழிபாடுகளை நாகர் கதிர்காமர் என்பவரது பரம்பரையினரே ஆரம்பத்தில் செய்து வந்ததா கவும் தற்காலத்தில் ஆகம விதிமுறைமையின் பிரகாரம் ஆறுகாலப்பூசை நடைபெற்று வருவதுடன், ஒவ்வொரு வருடத்திலும் மார்கழி மாதம் திருவெம்பாவை ஆரம்பநாளில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். 1964,1991,2013 ஆகிய வருடங்களில் புனராவர்த்தன மஹா கும்பாபிN~கம் நடைபெற்றதுடன், வருடத்தில் வருகின்ற பங்குனித்திங்கள் வழிபாடானது மிகவும் சிறப்பான முறையில் அனுஷ்டிககப்;பட்டுவருவதும் இதற்காக பக்தகோடிகள் நாலா திசைகளிலிருந்து பொங்கற்பொருட் களுடன் சென்று பொங்கி வழிபட்டு வருவதும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். பன்றித்தலையையுடைய தெய்வம் என்றும் மாட்டுத் தலையை பன்றித் தலையாக்கிய தெய்வம் என்றும் பண்டுதொட்டு இத்தலத்தினாள் என்னும் பொருளிலும் வழங்கப்பட்டு வரும் சிறப்பினைக் கொண்டமைந்த தாகவும் 2013 ஆம் ஆண்டில் புதிய ராஜகோபுரத்துடன் கம்பீரத் தோற்றமளிக்கும் இன்றைய வளர்ச்சி நிலையினை அடைந்ததெனலாம்