இவ்வாலயமானது கொடிகாமம் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியில் மூன்றுமைல் தூரத்தில் வரணி என்னும் பழமை பேணுகின்ற சுட்டிபுரம் என்ற இடத்தில் வீத pயின் மேற்கே பாலைமரச் சோலைகள் சூழ்ந்த இடத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பனவற்றை ஒருங்கே கொண்டமைந்த ஆலயமாக கண்ணகி அம்மன் கோயில் விளங்குகின்றது.சுவாமி ஞானப்பிரகாசரவர்கள் சிட்டிவேரம் என்பதிலுள்ள வேரம் என்பது சிங்களப்பெயரடி எனவும் அது வணக்கஸ்தலத்தைக் குறிப்பது என்றும் குறிப்பிடுவதிலி ருந்து சிங்கள மன்னர் ஆட்சிக் காலத்தில் இவ்வால யம் அமைந்திருக்கலாம் என இவ்வாலயத்தினுடைய வரலாற்றுக்காலத்தினைக் குறிப்பிடலாம். ஆரம்ப காலங்களில் ஞானியார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஆகமமுறை சாராத வகையில் பக்தி மார்க்கமாகப் பூசைகள் வழிபாடுகளைச் செய்து வந்தனர். வைகாசி மாத விசாகப் பொங்கலுடன் திருவிழா ஆரம்பிக்கும். இத்திருவிழா ஆரம்பமாவதற்குபதினைந்து நாட்களுக்கு முன்னாக ஊர்ப்பொது அபிN~கம் நடைபெற்று இவ்வாலயத்துடன் தொடர்புடைய வீரபத்திரர் கோயிலிற்கு மடைபோடப்பட்டு வழிவெட்டி பரிகலங்கள் விடப்படும். பொங்க லிற்கு முன்பாக எருவன்பகுதி கொட்டிகை முருகன் ஆலயத்திலிருந்து பண்டமெடுத்தல் நடைபெறும்.பொங்கலைத்தொடர்ந்து பதினைந்தாம் நாள் வைகாசி விசாகம் வந்த முதற் திங்கட்கிழமையில் ஊர்மக்கள் பொங்கலிட திருவிழா ஆரம்பமாகும்.தொடர்ந்து பதின்னான்கு நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இவ்வாலயத்தின் மேலதிக தகவல்களை உள்ளிடுங்கள்