வண்ணை குளங்கரை மருதடி இவ்வாலயம் வண்ணார்பண்ணை வடக்கு கே.கே.எஸ் வீதியும் இராமநாதன் வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 1880ஆம் ஆண்டு விஸ்வகுல மேஸ்திரியாகிய கந்தர் என்பவரால் கல்லினால் கட்டப்பெற்றது என அரச குறிப்பேட்டில் உள்ளது. 19ஆம் நூற்றாண்டளவின் பிற்பகுதியில் நாச்சிமார்கோயில் என அழைக்கப்பட்டது. இங்குள்ள மருதமரத்தில் தேவதை போன்ற பெண்ணை விறகுவெட்டச் சென்றவர்கள் கண்டதாகவும், அவ்வி டத்தில் கண்ணகை எனும் பெண் விளக்கு வைத்து பொங்கல், பூசை வைத்து வழிபட்டதாகக் கர்ண பரம்பரைக் கதை கூறுகிறது. இவ்வாறு வணங்கப்பட்ட தெய்வத்தை நாச்சிமார் எனப் பெயரிட்டு வணங்கி வந்தனர்.கி.பி.1887ஆம் ஆண்டு கும்பாபிN~கம் நடைபெற்றது. 1893 இல் பரிபாலனசபை அமைக் கப்பட்டது. ஆரம்பத்தில் மருதமரத்தடியில் இருந்த தேவதை வழிபாடு பெருவளர்ச்சியடைந்து ஆகம வழிபாட்டைக் கொண்ட கோயிலாக மாற்ற மடைந்துள்ளது. 1967ஆம் ஆண்டு முதல் சித்திரைப் பௌர்ணமியை தீர்த்தமாகக் கொண்டு 15 நாட்கள் மகோற்சவம் நடைபெறுகிறது. சைவாகம விதிப்படி அமைந்த இக்கோயிலின் இராஜகோபுரம் கவர்ச்சியான தோற்றமுடையது. இக்கோயின் அமைப்பு மிஸ்ராலயம் என்ற அமைப்பைக் கொண்டதாகக் காணப்படு கிறது. கர்ப்பக்கிரகத்தில் அமைந்துள்ள காமாட்சியின் வடிவம் ஸ்தானக நிலையிலே கருங்கல்லில் அமைக்கப்பெற்றுள்ளது.