ஏழாலை மேற்கு, கேணியடி குறிச்சியில் அமைந்துள்ள இவ்வாலயம் நூற்றைம்பது வருடங்கள் பழமையானது. கேணியடிச் சுற்றாடல் ஈச்சமரங்களாலும் கொன்றை மரங்களாலும் நிறைந்து காணப்பட்டது. அந்நாளில் கண்ணகை அம்பாள் ஈச்சமரத்தில் எழுந்தருளி பின்னர் கொன்றை மரத்தில் குடிகொண்டு பின்னர் கேணியடியிலிருந்த வடக்குத் திசையில் கூப்பிடு தொலைவில் காணப்பட்ட மாமரத்தில் குடி கொண்டார். நாளடைவில் மாமரத்தடியில் மண்டபம் அமைத்து கண்ணகை அம்பாளுக்கு வழிபாடு, பூசை, பொங்கல், குளிர்த்தி என்பன வற்றினைச் செய்து வந்தார்கள். அற்புதங்கள் பலவற்றினைச் செய்தருளிய அம்பாளுக்கு காலப்போக்கில் ஊர்மக்கள் அழகிய கோவிலொன்றை வ pதிமுறை வழுவாமல் அமைக்க முற்பட்டு அம்பாளின் திருவருளால் இனிதே நிறைவேற்றப்பட்டுள்ளது. மணவாளக்கோல சங்காபிN~க நாளை நிறைவாகக்கொண்டுமுதல் பத்து தினங்கள் உற்சவம் நடைபெற்று வருவது வழக்கம். கல்லடி வளவுக் கண்ணகை அம்பாள், கேணியடி கண்ணகை அம்பாள், கேணியடி கண்ணகா பரமேஸ்வரி போன்ற பலபெயர்களால் இவ்வாலயம் அழைக்கப்பட்டு வருகின்றது. நொதியில் அம்பாளை பேராதரித்துப் பேணிய வெள்ளைப்பிள்ளை குடும்ப சந்ததியில் வந்தவர்களே இன்றுவரை ஆலய பரிபாலனம் செய்து வருகின்றார்கள்.