மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயம் மருதநிலச் சூழலிலே அமைந்திருக்கின்றது. முன்னைய காலங்களி ல் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று தற்பொழுது ஆடி மாதத்தில் பத்து நாட்களுக்கு மகோற்சவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இற்றைக்கு 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இவ்வாலயம்மண்குடிசையில் கண்ணகை அம்பாள் என்றபெயர் வழக்கத்தோடு மக்களால் வழிபடப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கண்ணகை அம்மன் என வழங்கும் மீனாட்சிஅம்பாள் ஆலயமாகத் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1975 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1989 ஆம் ஆண்டு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்வாலயத்தின் மேலதிக தகவல்களை உள்ளிடுங்கள்