ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழமை வாய்ந்த இவ்வாலயம் கஜபாகு மன்னனால் கண்ணகி சிலையை இங்கு வைத்து பொங்கல் பூஜை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்கப்பட்டதா கவும் அதிலிருந்து ஆரம்பமாகிய ஆலயமாகவே இவ்வாலயம் கொள்ளப்படுகின்றது. ஆலயத்தின் உட்பிரவாகத்தினுள் காணப்படும் கூழாவடி மரம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இம்மரம் அமைந்துள்ள இடத்தில் கண்ணகி அம்மன் நாகசொரூபியாகத் தோன்றியதாக கர்ணபரம்பரைக் கதையொன்றும் நிலவி வருகின்றது. தைமாத அத்த நட்சத்திரத்தில் சங்காபிN~கம் மற்றும் பங்குனித் திங்கள் உற்சவங்களுடன் தமிழ் புதுவருடப்பிறப்பிற்கு முன்வரும் ஞாயிறு தினத்தில் கண்ணகித் தாயின் கிராம தரிசனமும் குளிர்த்தி வைபவமும் சிறப்பாக நடைபெறுவதுடன், ஆடிமாத பௌர்ணமிதிதியை தீர்த்த தினமாகக் கொண்டு வருடாந்த மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.