1860களில் கற்றளியாக்கப்பட்டு 1870இல்கும்பாபிஷேகம் வாரியார் வல்லியர் என்னும்பரம்பரையினரால் நிறைவேற்றப்பட்டதாகவரலாறு கூறுகின்றது.கொடிகாமம் பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் பக்கமாகஅமைந்திருக்கும் இவ்வாலயம் சுமார் நானூறுவருடங்களுக்கு முன்னர் தமது மாடுகளைக்காணாத மக்கள் பாலை மரத்தடியில் விநாயகரை வேண்டிக் கும்பிட்டு தாம் தேடிவந்தமாடுகள் கிடைக்கப்பெற்றதனால் கும்பிட்டான்புலம் என இவ்வாலயத்திற்கு பெயர் உருவானதென வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகின்றது.