சண்டிருப்பாய் கல்வளைப் பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லிதனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும்பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப் பெற்று வழிபடப்பட்ட ஏழு விநாயகர் ஆலயங்களில்ஒனறு என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திலும் ஆனி பௌர்ணமியைதீர்த்தோற்சவமாகக் கொண்டு கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12தினங்கள் மகோற்சவம் நடை பெறுவது வழக்கம்.