இவ்வாலயத்தின் வரலாறு தொடர்பாக கர்ணபரம்பரைக்கதைகளே ஆதாரமாகின்றன. அரியாலையில் வாழ்ந்த துளசியம்மாவின்கனவில் தோன்றிய பிள்ளையாரின் கூற்றுப்படி உருவாகிய கோவில் என்றும், ஆரம்பத்தில்கொன்றை மரத்தின் கீழ் சிறிதாக இருந்தஆலயத்தில் வெள்ளைச்சி என்றழைக்கப்படும்ஒரு மூதாட்டி பிள்ளையாரையும், வைரவரையும்தனது கண்ணாரக்கண்டு பிள்ளையாரின்அருளால் மக்களுக்கு அருள்வாக்குச் சொல்லிஆலயத்தில் பூசை வழிபாடுகளை நிகழ்த்திவந்ததாகவும் கூறப்படுகின்றமையும் கவனத்திற்கொள்ளப்படல்வேண்டும். 1925 ஆம் ஆண்டளவில் பொறளை நாகலிங்கம் என்னும் பிரபலவர்த்தகர் இக்கோயிலுக்கு நல்லாதரவு வழங்கிஅசையாமணி அமைத்து ஆலயத்தினை வளர்ச்சிக்குட்படுத்திச ;சென்றார். ஊர்மக்களின் பங்களிப்பும், முயற்சியும் இவ்வாலயத் தினை இன்றைய வளர்ச்சியினை ஏற்படுத்தியதெனலாம். ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்தரநட்சத்திரத்தினை அந்தமாகக் கொண்டுமகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.