ஒல்லாந்தர் காலத்தில் தோன்றியதாகக்கருதப்படும் இக்கோயிலானது கச்சேரி – நல்லூர்வீதியில் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்குஅருகில் அமைந்திருக்கின்றது. பெரியவளவுஎன அழைக்கப்படும் காணியில் துருத்தி கந்தன்என்பவர் துருத்தி வேலை செய்துவரும் காலத்தில் தனது வழிபாட்டிற்காக பிள்ளையார் படமொன்றினை வைத்து வணங்கி வந்ததாகவும்பின்னர் செங்கல்லால் சிறிய கோயிலாகக்கட்டியதாகவும் அறியமுடிகின்றது. 1865 ஆம்ஆண்டு காலப்பகுதியில் புனருத்தாரணம்செய்து பெரிய கோயிலாக்கினார். இவரதுஇறப்பின் பின்னர் இவரது பிள்ளைகளிடையேஏற்பட்ட ஆலயப் பிணக்கினை அரச அதிபரிடம்முறையிட்டு அவர் மூலம் புதிய பரிபாலன சபைஉருவாக்கப் பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் ஆலயம் படிப்படியாகஇன்றைய வளர்ச்சி நிலையினை எய்தியதெனலாம். துருத்திகந்தன் பிள்ளையார் எனஅழைத்து வரப்பட்ட கோயிலானது 1935 ஆம்ஆண்டு ஆவணி மாதம் நடைபெற்ற கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து கற்பக விநாயகர் எனஅழைக்கப்பட்டு வரலானார். 2012 ஆம் ஆண்டுகோபுரம் அமைக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டுகும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொருவருடத்திலும் வைகாசி மாதத்தில் வரும்பௌர்ணமித் தினத்தினை தீர்த்தோற்சவநாளாகக்கொண்டு பத்து நாட்கள் மகோற்சவம்நடைபெற்று வருவது வழக்கம்.