தென்னிந்திய வேதாரணிய வீரசைவமரபைச் சேர்ந்த சின்னத்தம்பி ஐயர் யாழ்ப்பாணத் திற்கும் இந்தியாவிற்குமிடையிலும் வர்த்தகத்தில்ஈடுபட்டு வந்தவர். இவர் இருபாலையில் விநாயகராலயமொன்றினை அமைக்கும் விருப்பத்தில்நெல்மூடைகளுக்குள் விநாயகர் விக்கிரகத்தைமறைத்துக்கொண்டு வந்து கோவில் அமைத்ததாகவும் பின்னர் போர்த்துக் கேயரால் ஆலயங்கள்அழிக்கப்பட்டவேளையில் இவ்வாலய விக்கிரகங்கள் பொதிசெய்யப் பட்டு ஆலயத்திற்குமுன்னால் அமைந்துள்ள திருக்கட்டுக்குளத்தில் புதைக்கப் பட்டதாகவும் சலவைத் தொழிலின்போது மீளவும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதிஷ்டைசெய்து வழிபடப்பட்ட தாகவும் வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன.1936 ஆம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகம் 1952, 1982, 1997 ஆகிய ஆண்டுகளிலும் மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றன. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும்அச்சுவினி நட்சத்திரத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பதினைந்து தினங்கள் திருவிழாநடைபெறுவது வழக்கம்.