Thursday, October 3

வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)

0

1933-01-09 ஆம் நாள் காங்கேசன்துறை என்னுமிடத்தில் சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் புதல்வியாகப் பிறந்து கனடாவில் வாழ்ந்த இவர் குறமகள் என்றபெயரில் கலை இலக்கிய உலகில் தன்னை தடம்பதித்துக் கொண்டார், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள், நாவல்கள் எனப் பல்வேறு தளத்தில் பணியாற்றிய இவர் ஓர் கல்வியி யலாளரும் சொற்பொழிவாளரும் எழுத்தாளருமாவார். தனது ஆரம்பக் கல்வியை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியிலும் பின்னர் உயர் கல்வியை இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத் திலும் கற்று தமிழில் விசேட பயிற்சிபெற்ற தமிழாசிரியராக தொழிலை ஆரம்பித்தார். இந்திய ஒரிஸா மாநிலத்தில் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டதுடன், கொழும்புப் பல்கலைக் கழகம் ஆசிரியர்களுக்காக நடத்திய நாடக அரங்கியல் பாடநெறியில் பட்டப்பின் டிப்ளோமா கற்கைநெறியினைப் பூர்த்தி செய்தவர். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைமாணிப் பட்டத்தினையும் பெற்றவர். ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர். யாழ். இலக்கிய வட்டத்தின் ஆரம்ப அங்கத்த வரான இவர் அதன் துணைத் தலைவராகவும் விளங்கியவர். தனது தமிழ் நேசிப்பினாலும் படைப்பு ஆளுமையினாலும் மூன்று தலைமுறைகளினூடாகவும் தமிழ்ப் படைப்பாளியாய் வாழ்ந்தவர். 1990 இல் குறமகள் கதைகள், 2001 இல் உள்ளக்கமலமடி என்னும் சிறுகதைத் தொகுதிகளையும், 2005 இல் மாலை சூட்டும் நாள் என்ற கவிதைத் தொகுதியினையும், 2007 இல் யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி என்ற ஆய்வு நூலையும், 2010 இல் கூதிர்காலக் குலாவல்கள் என்ற குறுநாவலையும், குருமோகன் பாலர் பாடல்கள், அருள்நெறிக் கோவை, சக்தி நெறி, பஞ்சாட்சரம், குகநெறிக்கோவை, ஈழத்து றோசா ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளதுடன், ஐவர் இணைந்து எழுதிய மத்தாப்பு என்னும் நாவலிலும், பத்து எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய கடல்தாரகை என்னும் நாவலிலும் ஒவ்வோர் அத்தியாயத் தினை எழுதி இலக்கியத்தடம் பதித்த இவர் 2016-11-12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!