1933-07-28 ஆம் நாள் வடமராட்சி- வல்வெட்டித்தறை என்னும் இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் அளவெட்டி கணேஸ்வரம் என்ற இடத்தில் வாழ்ந்தவர். அமரர்களான கனக செந்திநாதன், இ.நாகராஜன், கலைப்பேரரசு ஏ.ரீ.பொன்னுத்துரை, காரை செ.சுந்தரம்பிள்ளை, எஸ்.பொன்னுத் துரை மற்றும் கலாநிதி க.குணராஜா ஆகியோரிடம் எழுத்தாற்றலுக்கான அடித்தளத்தினைப் பெற்றுக் கொண்டவர் எனப் பெருமிதத்துடன் கூறியுள்ளார். இவர் யாழ்ப்பாணக் கதைகள், ஊரும் உலகும் , வேலி ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டவர். வீரகேசரி, தினகரன், ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் சுமார் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். 1981 ஆம் ஆண்டிலிருந்து பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கங்களின் சமாச வெளியீடான கற்பகம் இதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். யாழ்ப்பாண சமூகத்தில் அடிநிலைப்படுத் தப்பட்ட மக்களின் குரலாக இவருடைய எழுத்துக் கள் அமைந்துள்ளன. இழவு, கறை, ஊருக்காக, தேர், ஒன்றுக்குள் ஆயிரம், நரபலி, சாம்பல், அப்புவைத்தின்னிகள் போன்ற படைப்புக்கள் இவரது படைப்பாற்றலை வெளிப்படுத்தி நிற்பனவாகும். 2004-12-05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
முழுமையாக்குங்கள்