Sunday, October 6

திருஞானசம்பந்தன் , க

0

1913-10-20 ஆம் நாள் யாழ்ப்பாணம்- திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்தவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களிடம் கற்ற தமிழ் ஆசிரியமணியாவார். தமிழ்ச் சிறுகதை களுக்கு அழுத்தமான காவியமரபினை ஏற்படுத்தியவர். கலைமகள், கிராம ஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் எழுதி வந்தவர். மனித உணர்வுகளையும், மன அசைவு களையும் மனோதத்துவ முறையில் அவற்றின் சிறப்புக்களை கலையாக்கிய பெருமைக் குரியவர். ஈழத்துச் சிறுகதைகளில் உருவமும் உள்ளடக்கமும் அழகாகவும் கதைக் கோப்பில் ஆழமாகவும் விரவி நிற்பதனை இவரது படைப்புக்களில் காணலாம். சம்பந்தனது சிறுகதை களைத் தேடித் தொகுத்து சம்பந்தன் சிறுகதைகள் என்ற நூலுருவில் வெளியிடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரின் ஞாபகார்த்தமாக யாழ். இலக்கிய வட்ட அனுசரணையுடன் வருடாந்தம் சிறந்த ஆய்வு நூலுக்காக சம்பந்தன் விருது வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது. 1995-01-07 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

மேலதிக தகவல்களை நிரப்புங்கள்

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!