Sunday, October 6

சிவஞானசுந்தரம் , த

0

1915-09-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஏழாலை என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் இலங்கையர்கோன் என்ற புனைபெயரில் படைப்புலகில் பெயர் பெற்றவர். சிறுகதை,நாவல்,நாடகம் ஆகிய கலைகளில் நல்ல பல அறுவடைகளைத்தந்தவர். மொழிபெயர்ப்பு, வரலாறு, இதிகாசம், சமூகம், சமயம் ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடும் பெருவிருப்புமுடையவர். மனிதக் குரங்குகள், தாழை மரநிழலிலே, சக்கரவாகனம், நாடோடி, கடற்கரைக் கிளிஞ்சல், வஞ்சம் போன்ற பல சிறுகதைகள் இவருடைய படைப்பின் ஆழத்தினை எடுத்துக்காட்டுகின்றன. 1961-11-15 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

முழுமையாக்குங்கள்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!