Sunday, February 16

ஆனந்தமயில்,த.

0

யாழ்ப்பாணம், கரவெட்டி என்னுமிடத்தில் 1947-11-08 ஆம் நாள் தம்பிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். ஆரம்பக்கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத் திலும் இடைநிலைக் கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். உயர் தரத்தை வல்வை சிதம்பராக் கல்லூரியில் கற்றார். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பயின்று கலைமாணிப் பட்டம் பெற்றார். எழுத்தாளர். சிறுகதை, கவிதை, குறுநாவல், நாடகங்கள், மொழிபெயர்ப்புக்கள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். ஒரு எழுது வினைஞனின் டயறி என்ற சிறுகதைத் தொகுதி முதலில் வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் ஒற்றைக்கால்கோழி, முருகைக்கற்பூக்கள், காக்காச்சி கரிமகளே, திருவிழா, ஓர் எழுதுவினை ஞனின் டயறி, வாழும் வெளி, ஒரு கட்டுமரம் காத்திருக்கிறது, கொலுமீட்பு, விதி, கலை வந்தபோது, விளக்கீடு ஆகிய 12 சிறுகதைகள் உள்ளன. “சோகம் நிரம்பி யாத்திரை” என்ற சிவனொளிபாதமலை பயணம் பற்றி இவர் எழுதிய சிறுகதை அச்சுருப்பெறாத நிலையில் தொலைந்துவிட்டது. ‘வீச்சுவலைக்காரனும் மாதுளம் பிஞ்சுகளும்’ என்ற அச்சுருப்பெறாத கவிதைத்தொகுதியும், தொகுக்கப்படாத பல கவிதைகளும் உள்ளன. இவை இன்னமும் நூலுருப் பெறவில்லை. ‘அம்மாவரை அவன்’ என்ற குறுநாவலை எழுதியுள்ளார். இது 2012 இல் வெளிவந்த “நினைவிலிருந்து சொற்களுக்கு” என்ற தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளது. இவர் எழுதிய ‘சீதனம்’ என்ற நாடகம் 1980-1981 காலப்பகுதியில் பொலிகை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தால் மேடையேற்றப்பட்டது. இவரது ‘வாக்குறுதி’, எதற்குமோர் எல்லையுண்டு’ ஆகிய நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள் ளன. செல்லச்சாமியின் ‘விடுதலைக் கோர் பார்வை’ என்ற நாடகத்தில் பெண் வேடமிட்டு நடித்தார். இவருடைய ஒரு எழுதுவினைஞ னின் டயறி என்ற சிறுகதைத் தொகுதி 2008 இல் வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான விருது மற்றும் எழுத்தாளர் ஊக்குவிப்புமையம் வழங்கும் தமிழியல் விருது ஆகியவைகளைப் பெற்றது. ஒரு எழுதுவினைஞனின் டயறி (வர்ணா வெளியீடு – மார்ச் 2008) நினைவிலிருந்து சொற்களுக்கு (ஏப்ரல் 2012) நூல்வடிவம் பெற்றுள்ளன. 2012 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

இவரது வரலாற்றினை  மேலும் வழங்கி உதவுங்கள்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!