1950-08-07 ஆம் நாள் யாழ். தீபகற்பம் புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்தவர். நாடறிந்த நல்ல கவிஞன். சமூக அநீதிகளையும், மக்களின் மன உணர்வுகளையும் பாடியவர். அகங்களும் முகங்க ளும், காலத்துயர், காற்று வழிக்கிராமம், நெற்றிமண் போன்ற பல கவிதைத் தொகுதி நூல்களை வெளியிட்டவர். 2006-12-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.