1926-06-18 ஆம் நாள் வடமராட்சி – கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த சமூக சேவையாளரான இவர் ஆளுமைமிக்க பன்முகப்பரிமாணமுடைய படைப்பாளி. கவிதை, நாடகம், நகைச்சுவை ஆகிய துறைகளில் ஈடுபாடும் சிறப்பான வெளிப்பாடும் உடையவர். இவருடைய கவித்திறனைப் பாராட்டி பண்டிதமணி அவர்கள் மன்னவன் என்ற பட்டம் சூட்டிப் பெருமைப்படுத் தினார். 2004-02-15 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.