1928-01-05 ஆம் நாள் யாழ். தீபகற்பம் சரவணை என்னும் இடத்தில் பிறந்தவர். தில்லைச்சிவன், சிவாஜி என்ற புனைபெயர்களில் கவிபாடியவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றிய இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் ஆகிய கலைச்செயற்பாடுகளில் ஈடுபாடுடையவராயினும் கவிஞனாகவே அறியப்பட்டவர். மறுமலர்ச்சி, புயல்வீரன், மின்னொளி, ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, மல்லிகை போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிவந்தவர். 1949 இல் தமிழன், 1956 இல் கலைச்செல்வி பத்திரிகைகளின் இணை இதழாசிரியராகப் பணியாற்றியவர்.1961 – கனவுக்கன்னி, 1969 – தாய், 1985 – குழந்தைப்பாடல்கள், 1986- பாப்பாப்பாட்டுக்கள், 2001-படைப்போம் பாடுவோம், 2004- தந்தை செல்வா காவியம், 1996 – தாழம்பூ ஆகிய கவிதை நூல்களையும் 1999 – சிறுவர்கதைப் பெட்டகம், 1997- அந்தக்காலக் கதைகள், 2003 – காவல்வேலி ஆகிய கதை நூல்களையும் வெளியிட்டுள்ள மையும் குறிப்பிடத்தக்கது. 1993 இல் நான் என்னும் சுய காவியத்தினையும் வெளியிட்டு 2004-11-26 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.