1938-06-15ஆம் நாள் யாழ். தீபகற்பம் அல்லைப்பிட்டி என்ற இடத்தில் பிறந்து மானிப்பாய் நவாலி என்னும் இடத்தில் வாழ்ந்த இக்கவிஞன் பாவலர் என்ற புனைபெயரில் கவிபாடியவர். கவியரங்கு களில் கவிபாடுவதில் தனக்கென்றொரு பாணியினை வகுத்துக்கொண்ட இவர் பல அந்தாதிகளை யும், சிறுவர் பாடல்களையும், கத்தோலிக்க மதப்பாடல்களையும் பாடியவர். 2001-06-30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.