Tuesday, February 18

சத்தியகுமரன், சிவகடாட்சம்பிள்ளை

0

 

1965-09-12 ஆம் நாள் யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். சிறுகதை,கவிதை, சிறுவர்பாடல்கள். மேடைநாடகம், விமர்சனம் எனப் பல்துறைகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர். மாவை வரோதயன் என்ற புனைபெயரில் நூற்றிற்கு மேற்பட்ட விமர்சனங் களையும், சிறுகதைகளையும் எழுதியவர். சிறுகதைகளை வேப்பமரம் என்ற தொகுப்பாகவும், கவிதைகளை இன்னமும் வாழ்வேன் என்ற தொகுப்பு நூலாகவும் ஒற்றுமையாய் ஆடுவோம் என்ற சிறுவர் பாடல் தொகுப்பு நூலாகவும் வெளியிடப் பெற்றுள்ளன. உதயன், சஞ்சீவி, தினகரன், வீரகேசரி முதலிய பத்திரிகைகளிலும் ஈழத்துச் சஞ்சிகைகளிலும் விமர்சனக் கட்டுரைகள் பலவற்றினை எழுதியவர். தாயகம் என்ற சஞ்சிகையில் வலிகாமத்து மைந்தர்கள் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதியவர். இலங்கை வானொலி, எழுத்தாளர் வேல் அமுதன் ஆகியோர் இவரது படைப்பாக்கத்திறனின் ஊன்று கோலாவார் எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். 2009-08-20 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!