1939.09.25 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வடமராட்சி புலோலி கிழக்கு பருத்தித்துறை என்ற இடத்தில் பிறந்தவர். வடமராட்சி மண்ணின் விளையாட்டுக்களின் நிர்மாணச் சிற்பி சு.கதிர்காமத்தம்பி அவர்களிடம் சாகச விளையாட்டுக்களைப் பயின்று மாபெரும் சாதனையாளனாகத் திகழ்ந்தவர். புலோலி கிழக்கில் ஜிம்னாசியம் என்ற கழகத்தினை நிறுவி சாகச விளையாட்டு வீரர்களை உருவாக்கி வந்தார். இவரது சாதனைகளாக மாட்டுவண்டிலில் ஆட்களையேற்றிய வண்ணம் கழுத்தின் மேல் சக்கரங்களை ஏற்றுதல், இரும்புக்கம்பியினை தலையினால் வளைத்தல், BSA மோட்டார் கைக்கிளை கழுத்தினாலும், 50 சீமெந்துப் பைக்கற்றைப் பற்களினாலும் ஒரே நேரத்தில் தூக்குதல், உடலின் மேல் லொறி ஏற்றுதல், மார்பின் மீது கல்லுடைத்தல், நிலத்தினுள் படுத்து தீ வைத்தல், வயிற்றின் மீது குண்டு போடுதல், மூன்று உழவு இயந்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாக உடலில் ஏற்றுதல் போன்ற பல சாகசங்களைப் பட்டியலிடலாம். 1994.10.23 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன