1929.11.30ஆம் நாள் யாழ்ப்பாணம் – வடமராட்சி புலோலி கிழக்கு என்ற இடத்தில் பிறந்தவர். வடமராட்சி மண்ணில் முதன் முதலாக மல்யுத்தம், குத்துச்சண்டை, சாகசச்செயல்கள் முதலியவற் றினை ஒருங்கிணைத்து மக்களிடையே அறிமுகம் செய்து வைத்து இத்துறையில் வீரர்களை பயிற்றுவித்து சாகசச் செயல்களில் வீரர்களை நாட்டம் கொள்ள வைத்தவரும் வித்திட்டவரும் ஆவார். வடமராட்சி மண்ணின் விளையாட்டுக்கழகங்களின் நிர்மாணச் சிற்பியாக போற்றப்படும் உலகம் போற்றும் சாதனையாளனாக திகழ்ந்த சாண்டோ எம்.துரைரத்தினம் இவரிடம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1977.02.19 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.