Sunday, May 5

அமெரிக்கன் இலங்கை மிஷன் தேவாலயம் – பண்டத்தரிப்பு

0

1656ஆம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் தாங்கள் அனுசரித்த சமயமாகிய புரட்டஸ்தாந்து சமயத்தினைப் பரப்பும் போது இவ்வாலயத்தினையும் புரட்டஸ்தாந்து வழிபாட்டிற்காகப் பாவிக்கத் தொடங்கினார்கள். இவர்கள் 1796 வரை 152 ஆண்டுகள் இவ்வாலயத்தினைப் பாவித்து வந்ததுடன் பண்டத்தரிப்புப் பகுதியிலே ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ சமூகத்தையும் உருவாக்கியிருந்தார்கள். 1796ஆம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலேயருடைய ஆட்சி உதயமானது. ஆங்கிலேயர் ஆட்சியைக் கைப்பற்றியதும் அவர்கள் சமய சுதந்திரத்தை அறிவித்தார்கள். அமெரிக்கன் மி~ன் சங்கத்தால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட  2ஆம் கட்ட மிஷன் ;தொண்டர் அணியில்  4 மிஷன் தொண்டர் குடும்பங்கள் அடங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த கல்விமான்கள் அவர்களில் வைத்திய கலாநிதி ஜோன் ஸ்கடர் அவர்களும் அவர் மனைவியும் பண்டத்தரிப்பு ஆலயத்தை 1820ஆம் ஆண்டில் பொறுப்பேற்றனர். அமெரிக்கன் இலங்கை மிஷன் தேவாலயமான இவ்வாலயத்தில் 1820ஆம் ஆண்டுமுதல் இறைபணி மருத்துவப்பணி கல்விப்பணி சமூகமேம்பாட்டுப் பணி என்பன டாக்டர் ஜோன் ஸ்கடர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் 1831ஆம் ஆண்டு வரை மேற்குறிப்பிட்ட 5 ஆலயங்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது.1831ஆம் ஆண்டு இந்த 5 ஆலயங்களும் தனித்தனியான நிர்வாகங்களாகப் பிரிக்கப்பட்டதிலிருந்தே இப்பண்டத்தரிப்பு ஆலயத்தின் அமெரிக்க மிஷன் வரலாறு கணிக்கப்படுகின்றது. இன்று இவ்வாலயம் அமெரிக்க மி~னின் 185 ஆண்டுகள் வரலாற்றினைக் கொண்ட ஆலயமாகத் திகழுகின்றது. பண்டத்தரிப்பு 1831இல் தனி நிர்வாகமாகின்றபோது 21 அங்கத்தவர்களைக் கொண்ட சபையாகக் கருதப்பட்டது. இங்கு பணிகளை ஆரம்பித்த வைத்திய கலாநிதி ஜோன் ஸ்கடர் அவர்களே உலகத்தில் முதன் முதலாக நற்செய்திப்பணிக்காகப் புறப்பட்ட வைத்திய மிஷனரியாவார். இவருடைய 5 சந்ததிகள் வைத்தியர்களாக ஆசியாக்கண்டத்திலே தொடர்ச்சியாக மிஷன் பணிகளைச்செய்து வருவதும் இவருடைய பேத்தியார் ஐடா ஸ்கடர் வேலூரில் உள்ள பிரபலமான வைத்தியசாலையையும் வைத்தியக் கல்லூரியையும் ஆரம்பித்தார் என்பதும் பெருமை தரும் விடயங்களாகும். இப்பண்டத்தரிப்பு ஆலயம் பின்னர் 1847ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் உதயமான திருச்சபை ஐக்கியத்துக்குள் இணைந்து கொண்ட யாழ்ப்பாண அத்தியட்சாதீனத்தின் ஒரு ஆலயமாக 2007ஆம் ஆண்டு வரை காணப்பட்டு பின்பு மறுபடியும் அமெரிக்கன் மிஷன் திருச்சபையின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டது. இன்று இவ்வாலயமும்குருமனையான ஸ்கடர் இல்லமும் அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபையின் பணிக்களங்களின் ஒன்றாகக் காணப்படுகின்றது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!