Wednesday, September 11

பழைய வேதக்கோயில்

0

ஞானப்பிரகாசரின் குறிப்புக்களிலிருந்து 1800 ஆம் ஆண்டளவில் சிறிய ஆலயமாக அல்வாய் வடக்கு என்ற பகுதியில் அமைந்திருந்தது. மீண்டும் 1860 இல் புதிதாகக் கட்டப்பட்டது. இவ் ஆலயத்தினை அமைப்பதில் அருட்தந்தை கோட்டான் என்பவரேஅயராது பாடுபட்டார். இவ்ஆலயம் மற்றையஆலயங்களினைவிட வேறுபட்டதாக மேற்கே பெரிய வாசலினையும் கிழக்கே பலிபீடத்தினையும் கொண்டு விளங்கியது. 1901 ஆம் ஆண்டிற்குப் பின் புதிய ஆலயம் சக்கோட்டை கடற்கரைப் பகுதியில் அத்திபாரம் இடப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதனை ஒல்லாந்தர்கால சேச் என்றும் அழைப்பர். ஆனால் அவ்வாறாயின் இதன் ஆரம்பக்காலம் ஒல்லாந்தர் காலமாகிய 1658 ஆம் ஆண்டு தொடக்கம் 1798ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் இடம்பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஒல்லாந்தர்கள் புரட்டஸ்தாந்து மதத்தைச் சார்ந்தவர்கள் எனவே இது போர்த்துக்கீசர் காலத்தில் எழுந்த கோயில்எனக்கொள்ளலாம். இவ் ஆலயம் தொல்பொருட்சின்னமாக தொல்பொருட் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!