ஊர்காவற்றுறை, சரவணை, சின்னமடுகிராமத்தில் அமையப்பெற்றுள்ள இவ் வாலயம் அரச வர்த்தமானி பிரசுராலயங்களில் ஒன்றாக விளங்குகின்றது. ஜூலை மாதத்தில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். யாத்திரைத்தலம் என அழைக்கப்படும் இவ் வாலயத்தின் பெருந் திருவிழாவிற்கு யாழ்ப்பாணத்தின் நாலா திசைகளிலுமிருந்து பக்தர்கள் வருகைதந்து வழிபடுவது வழக்கம்.