இவ் ஆலயம் பருத்தித்துறைப் பகுதியில்மிகப் பழமையானது என நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய “ஓஓஏ லுநயசள ஊயவாழடiஉ Pசழபசநளள” (1893 – 1918) என்ற நூலின் பக்கம் 208 இல் குறிப்பிட்டுள்ளார. இவ்வாலயம் ஒல்லாந்தர் காலத்தில் கொட்டிலாக கட்டப்பட்டிருந்தது. இது மிகவும் பள்ளமான காணியில்கட்டப்பட்டிருந்ததாகவும் இக்காணியின் பெயர் “மாவச்சை” என்பதாகும். இக்காணி பள்ளமாகஇருந்தமையினால் இங்குள்ள மாதாவை பள்ளத்து மாதா என அழைத்துவந்தனர். எனவேபுதிய மரியன்னை ஆலயம் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டது. இது பழைய கோயில் இருந்த இடத்திலிருந்து தெற்கே சற்று மேடாக இருந்த இடத்தில் கட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இக்கோயிலுக்கான மூலைக்கல்லினை 1880 இல் மறைந்த அருட்பணி சார்ள்ஸ் ஹெக்ரர் மௌறோயிற் அடிகளாரால் இடப்பட்டப்பட்டு 1900இல் பூர்த்தியாகி 2005 ஆம் ஆண்டில் இவ்வால யத்தின் 125ஆம் ஆண்டு நிறைவுவிழா கொண்டாடப்பட்டது. இவ்வாலயத்தின் வருடாந்தத் திருவிழா கார்த்திகை29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மார்கழி மாதம ;08 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.