பிறவுண் வீதி, நீராவியடியில் அமைந்துள்ள இக்கோவில் இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றுள்ளது. பூலோகமுதலியார் என்பவர் இந்தியாவின் வேதாரணியத்திலிருந்து தனது குலதெய்வமாகிய வீரகத்தி விநாயகரைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததாக அக்கோயில் கும்பாபிஷேக மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பரம்பரையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.1782ஆம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகம் இடம்பெற்றது.1979ஆம் ஆண்டு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன்கூடிய இராஜகோபுரம் அமைத்துஆகம விதிப்படி கோயில் அமைக்கப்பட்டு 1989ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டுகோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.