பலாலி வீதிக்கு மேற்கே, உரும்பிராய்வடக்கில், ஓடையம்பதி என்று அழைக்கப்படும்குறிச்சியில் இக்கோயில் அமைந்துள்ளதால்உரும்பிராய் ஓடையம்பதி கற்பகப் பிள்ளையார்கோயில் என்ற பெயராலும் அறியப்படுவதுஉண்டு. கோயிலின் தெற்கு மேற்கு வீதிகளில்உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும்,கிழக்கில் பலாலி வீதிக்கு அடுத்த பக்கத்தில்பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபமும்,வடபால் தோட்ட நிலங்களும் அமைந்துள்ளன.1834 ஆம் ஆண்டில் கணபதி ஐயர் என்பவர்உரும்பிராய் மக்களின் உதவியுடன் தற்போதுகோயில் இ ருக்கும் பகுதியில் மூன்று பரப்புநிலத்தில் ஒரு சிறிய கோயிலைக் கட்டுவித்தார். இதன் விரிவாக்கத்துக்காக, இதற்கு மேற்குப்பகுதியில் அமைந்திருந்த நிலங்களைஉரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த அவற்றின்உரிமையாளர் நன்கொடையாக வழங்கினார்.அன்றைய கோயிலுக்கும் பலாலி வீதிக்கும் இடையே இன்னொரு நிலமும் வீடும் விரிவாக்கத்துக்குத் தடையாக இருந்தன. இன்னொருஅன்பர் தனக்குச் சொந்தமாக அயலில் இருந்தநிலத்தை மாற்றீடாகக் கொடுத்து அக்காணியையும் கோயிலுக்காகப் பெற்றுக்கொடுத்தார்.இதனால், கோயிலைப் பெரிதாகக் கட்டுவதற்குத் தேவையான நிலங்கள் கிடைத்தன. கோயில் விரிவாக்கத்துக்காக மட்டுமன்றி, பள்ளிக்கூடங்கள் போன்ற பொதுத் தேவைகளுக்காகவும் குத்தகைக்குக் கொடுக்கக்கூடிய அளவுக்குக்கோயிலுக்கு நிலங்கள் இருந்தன. உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயம் என்பன இக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களிலேயே அமைக்கப்பட்டன. அக்காலத்தில் உரும்பிராய் கிழக்கிலும், வடக்கிலும் வாழ்ந்த சிலர் ஊர்மக்களின் உதவியுடன் கோயிலின் கருவறைவிமானத்தைக் கட்டியதுடன் ஆண்டுதோறும்பத்து நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவும்ஒழுங்கு செய்தனர். 1982 ஆம் ஆண்டில் கோயிலுக்கு இராஜகோபுரம் கட்டுவதற்காக அடிக்கல்நாட்டப்பட்டது. 1991 ஆம் ஆண்டில் கோபுர வேலைகள் நிறைவடைந்து குடமுழுக்கும் இடம்பெற்றது. இவ்வாலயத் திருவிழா ஆனிப ;பூரணையைத் தீர்த்தத் தினமாகக் கொண்டுநடைபெறுகின்றது. ஒரு காலத்தில் பத்துத்திருவிழாக்களே நடந்தன. இப்பொழுது பதினைந்து திருவிழாக்கள் இடம்பெறுகின்றன.