பதினெட்டாம் நூற்றாண்டில் கருணாகரத்தொண்டைமானால் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வாலயம்உரும்பிராய் இணுவில் மக்களால் வழிபடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. உரும்பிராய் மேற்கில்இணுவிலை அண்மித்த பகுதியில் மூன்றுகோயிலடி என அழைக்கப்படும் பகுதியில் மூர்த்தி,தலம், தீர்த்தம், கோபுரம், கூடம் என்பவற்றினைக்கொண்டு மணிமண்டபத்துடன் காட்சியளிக்கும் இவ்வாலயம் ஒவ்வொரு வருடத்திலும் ஆவணிமாதத்தில் வருகின்ற சதுர்த்தி முடிய வருகின்றபௌர்ணமித்திதியில் தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள்மகோற்சவம் நiபெறுவது வழக்கம்.