கொழும்புத்துறை மேற்கில் இலந்தைக்குளம் வீதியில் அமைந்திருப்பது தான் வதிரிபீடஸ்ரீ மன்றாடும் பெருமான் விநாயகராலயமாகும். தவத்திரு யோகர் சுவாமிகள் வாழ்ந்த பதியாகவிளங்கும் இவ்வாலயமானது கி.பி.1623 இல் தென்னோலையினால் வேயப்பட்ட கொட்டிலில் வழிபடப்பட்டு வந்தது. வதிரி என்பது இலந்தைமரத்தினைக் குறிக்கும். இவ்வாலயத்தினைச்சுற்றி இலந்தை மரங்கள் பெரும்பான்மையாக இருந்தமையாலும் இலந்தைக்குளம் என்னும் குளம் அருகில் இருந்தமையாலும் இலந்தைக்குளம் பிள்ளையாராலயம் என அழைக்கப்பட்டது. இற்றைக்கு 350 வருடங்களுக்கு முன்னர்இக்கோயிலின் முன்பாக நல்லூர் அரசகுமாரன்எதிர்மன்னசிங்கனை போர்த்துக்கேயத் தளபதிபிலிப் டீ ஒலிவேரா என்பவனால் சிரச்சேதம ;செய்யப்பட்டமையால் கோயில் குருக்களும்வாளேந்தி போர்புரிந்து அரசகுமாரனுடன்வீரமரணம் அடைந்த வரலாற்றினை இவ்வாலயஇராஜகோபுரத்தினுடைய தென்பகுதியில ;சிற்பமாக வடித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடத்திலும் வைகாசிவிசாகமன்று தீர்த்தோற்சவம் நடைபெறும்வகையில் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள்மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.