ஆத்தி மரத்தினை தலவிருட்சமாகக் கொண்டுஆத்தியடி என்னும் பெயரால் அமைந்த ஆத்தியடிப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயமானது1850 ஆம் ஆண்டளவில் இவ்வூர் மக்களுக்குவிநாயகப் பெருமான் தன்னை குறிப்புக்களாலும்கனவிலும் காட்சி கொடுத்து சிதைவடைந்திருந்த ஆலயத்தின் நடுவிலே தோன்றிய ஆத்திமரத்தின் கீழ் வழபாடு செய்யுமாறு பணித்தருளினார். இதனால் பக்தர்கள் ஆத்தி மரத்தின்கீழ் விநாயகரை எழுந்தருளச்செய்து ஆலயத்தினை செப்பனிட்டு சீர்செய்து ஆத்தியடிப் பிள்ளையார் எனத் திருநாமம் சூட்டி வழிபடலாயினர். இதனடிப்படையிலேயே சின்னத்தம்பசிட்டி என அழைக்கப்பட்ட இக்கிராமம் ஆத்தியடி என அழைக்கப்படலாயிற்று. காலப்போக்கில் விநாயகரது சிறந்த பக்தனாகியவேலாயுதம் உபாத்தியாயரது கனவில் தோன்றிகார் வளப்பெருக்கும் எறும்புக்குழியும் உள்ளஇடத்தில் தம்மை இருத்தி கோவில் அமைக்குமாறு உணர்த்தினார். தற்போது கோவில்அமைந்துள்ள இடத்தில் சாணகத்தால் மெழுகியசிறிய மண்டபமமைத்து ஓலையால் வேயப்பட்டகூரையுடன் வழிபட்டு வந்தனர். வேலாயுதம் உபாத்தியாயர், சண்முகம் முத்தையா ,வேலாயுதம் ஆறுமுகம் ஆகியோரது முயற்சியால் 1901 ஆம் ஆண்டு பங்குனி முப்பதாம் திகதிபாலஸ்தாபனம் செய்யப்பட்டு புதிய கோவில்அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பல்வேறு காலங்களிலும் பலவிதமான புனராவர்த்தன வேலைகள் நடைபெற்று வந்துகோயில் இன்றைய வளர்ச்சி நிலையினை அடைந்ததெனலாம். 1944-06-27 ஆம் நாள்நடைபெற்ற கும்பாபிஷேகத் தினைத் தொடர்ந்துபத்து தினங்கள் நடைபெற்று வந்த அலங்காரத்திருவிழா வினை 1946 இல் இருந்து மகோற்சவமாக மாற்றியமைத்து வைகாசி மாத பௌர்ணமி தினத்தின்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பூர்வபட்ச ஷஷ்டித்திதியில் ஆரம்பித்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற்று வருவது வழக்கமாகும்.
வரலாற்றுத் தகவல்களை உங்களால் அதிகரிக்க முடியுமாயின் உதவவும்