பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் பேராசிரியராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ”மகாலிங்கம் தியறி” என்பது பொறியியல் ஆய்வுத் துறையில் முக்கியமான ஆய்வுக் கண்டுபிடிப்பு! பேராசிரியர் மகாலிங்கம் லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். 1970களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக அவர் கடமையாற்றத் தொடங்கினார்.“தனக்குக் கிடைக்க இருந்த அன்பளிப்பை ஜெட் இயந்திரமாக வாங்கி பேராதனை பல்கலைக்கழகத்திற்கு வழங்கியவர்” சிங்கப்பூரின் ஓர் பகுதியாகக் காணப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த மகாலிங்கம், உயர்கல்வியைத் தொடரும் நோக்கில் 1946ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்தார். மகாலிங்கம் சிலோன் இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து கொண்டு பொறியியல்துறையில் பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்துள்ளார். இலங்கையில் பொறியியல் பீடத்தில் பட்டக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்து, 1950ஆம் ஆண்டு ஜூலை மாதம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இள விரிவுரையாளர்களில் ஒருவராக பேராசிரியர் மகாலிங்கம் இணைந்து கொண்டார். 04-11-2015 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.