1887 ஆம் ஆண்டு கோண்டாவிலில் பிறந்தவர். ஆன்மீக வழியில் மக்களை ஆற்றுப்படுத்தியவர். அமெரிக்காவைச் சேர்ந்த கில்டாகாட்டன் என்னும் பெண்மணி இவரைக் குருவாகக் கொண்டு அவரது பணிகளை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1950-12- 12 ஆம் நாள் சமாதியடைந்தார். இவரது சமாதி வைக்கப்பட்ட இடம் இன்று சிவாலயமாக கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு எதிரே காணப்படுகிறது. நமசிவாயம் சுவாமிகள், சிதம்பரியார் அப்புக்குட்டி சாவகச்சேரி கல்வயல் என்னும் இடத்தில் 1909ஆம் ஆண்டு பிறந்த சுவாமிகள் நாற்பதாணடு; காலம் வேதாநத் மடத்தில் வாழந்து சிவப்பணியாற்றியவர். வேதாந்த மடத்தில் தொடர்புபட்டிருந்த சங்கரவளவு கந்தையா சுவாமிகளின் தொடர்பால் இராமலிங்க சுவாமிகளின் ஆன்மீக வகுப்புகளில் பங்குகொண்டு இவரையே குருவாகக்கொண்டு 1944 ஆம் ஆண்டிலிருந்து வேதாந்த மடத்துடன் தன்னை முற்றுமுழுதாக இணைத்துக் கொண்டார். ஆதீனத்திற்குரிய விளைவேலி மடம், தென்னைவளவு ஆகிய ஆதனங்களைப் பராமரித்து வந்ததுடன் இராமலிங்க சுவாமிகளின் பிரதான சீடராகவும் வாழ்ந்தார். இராமலிங்க சுவாமிகளின் சமாதி நிலையினைத் தொடர்ந்து அடியார்களால் குருபீடாதிபதியாகப் பணியாற்ற நியமிக்கப்பட்டார். 1983.11 ஆம் மாத றோகிணி நட்சத்திரத்தில் சமாதியானார்.இவரது புகழுடல் கோம்பயன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.