செங்குந்த மரபில் வீரகத்திப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினருக்கு 1865.08.19 ஆம் நாள் றோகினி நட்சத்திரத்தில் முத்துப்பிள்ளை என்ற நாமத்தில் அவதரித்தார். கதிரேசு என்பவரை திருமணம் செய்தார். நல்லூரில் வாழ்ந்து முருகனது அருளைப் பெற்ற இவர் நல்லூர் தேரடியில் மடம் அமைத்து முழுமை துறவு பூண்டு பணிபுரிந்தார். நகுலேஸ்வரம், கதிர்காமம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் மடமமைத்துப் பணிபுரிந்தார்.இவரால் நல்லூரில் அமைக்கப்பட்ட மடமானது தற்பொழுது அறுபத்துமூவர் குருபூசை மடம் எனப் பெயர் மாற்றப்பட்டு ஆத்மீகப் பணிகளையாற்றி வருகின்றது.திருநெல்வேலி கிழக்கு வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட மடமானது அனைத்து மடங்களுக்கும் தலைமையகமாக விளங்கி வருகின்றது. ஈழத்துச் சித்தர் சடையம்மாவின் வாழ்க்கை வரலாற்றினை சரவணை ஸ்ரீமான் ஆ.தில்லைநாதபிள்ளை என்பவர் அறுபது பாக்களில் அமைத்துள்ளார். இப்பாக்கள் 1957 ஆம் ஆண்டு சிறு நூலாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடையிற் சுவாமிகள், பால்குடிபாபா என்பவர்களைக் குருவாக ஏற்று ஞான உபதேசம் பெற்ற ஈழத்து முதற்பெண் சித்தராகிய இவர் 1936-08-05 ஆம் நாள் சுக்கிரவார அனுச நட்சத்திரத்திர உச்சி வீங்கி வெடித்துச் சமாதி அடைந்தார்.
