கீரிமலை,மாவிட்டபுரம் ஆகியதலங்களுடன் மிகநெருங்கிய தொடர்புடைய ஆலயமாகக் கருதப்படும் ஆனைவிழுந்தான் விக்கின விநாயகர் ஆலயத்தின் வரலாறானது காங்கேசன் துறைப் பிள்ளையார் கோயிலில் உள்ள மூலமூர்த்தியோடு விளங்கும் ஒத்ததன்மையைக் கொண்ட இவ்வாலயம் கி.பி 6-10 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாமெனக் கருதப்படுகின்றது. குதிரை முகமான, விகாரமான தன்முகமும் குன்மநோயும் நீங்கவேண்டித் தலயாத்திரையும் தீர்த்தயாத்திரையும் செய்து வந்த சோழசேனாதிபதியாகிய திசையுக்கிரசோழனது மகள்தான் மாருதப்ரவீகவல்லி, சுழிபுரம் எனவழங்கும் சோழிபுரத்தில் இறங்கி நகுலேஸ்வரத்திற்குச் செல்லும் வழியில் அவரைச் சுமந்து வந்த யானை ஓரிடத்தில் நின்றது. அவ்விடத்திலே அரசி வீழ்ந்து வணங்க அவளுடன் வந்த யானையும் வீழு;ந்து வணங்கியது. அவ்விடத்திலே ஓர் விநாயகர் விக்கிரகம் காணப்பட்டது. ஆனைவிழுந்து வணங்கியதால்; இவ்வாலயப் பெருமான் ஆனைவிழுந்தான் விக்கின விநாயகப்பெருமான் என அழைக்கப்பட்டார். ஆனைவிழுந்து வணங்கப் பெற்ற லிங்க விநாயகர் (மூன்றாம் மண்டபத்திலேஉள்ளார்) எம்பெருமானின் இறை தத்துவத்தை விளக்குகின்றது.