சுதுமலையில் பிறந்து வாழ்ந்த பெரிய சித்தர்களில் அண்ணாமலைப் பரியாரியார் மிகவும் குறிப்பிடத்தக்கதொருவராவார். இவர் மருத்துவவேந்தர் என அழைக்கப்பட்டவர். இவருடைய வீட்டு முற்றத்தில் எந்தநேரமும் நோயாளர்கள் நிரம்பி வழிந்த வண்ணமிருப்பர். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி ஒரேவகையாக எல்லோருக்கும் மருத்துவம் செய்த பெருந்தகையாளர். பணத்துக்காகவன்றி மக்களுக்காக வைத்தியம் செய்தவர். நோயாளர் கொடுக்கும் பணத்தை மட்டும் வாங்குவார். பணவசதியற்றோருக்கு இலவசமாகவே வைத்தியம் செய்வார். இவருடைய வீட்டு வாசலில் இறைவன் சந்நிதியில் எல்லோரும் சமம் என்ற பொன்மொழி பொறிக்கப்பட்டிருக்கும். இளைஞர்களை உழைப்பதற்கு ஊக்கப்படுத்தி தட்டிக்கொடுக்கும் பெருந்தகையாளன். பாரம்பரிய மான முறையில் இறைவனது அருளாசியுடன் சித்தவைத்தியத்தின் மூலம் மக்களது நோய்களைக் குணப்படுத்தினார். இவருடைய அருளாசியின் மூலமே இணுவில் அண்ணா தொழிலகம் உருவானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.