கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கோண்டாவில் உப்புமடம் சந்தியில் சமயகுரவர் ஆலயத்தினை நிறுவி ஆன்மீகப் பணியாற்றியவர்.இவ்வாலயம் அழிவடைந்தமையினால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகங்கள் கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பெற்று ஆராதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.