1868 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மீது பற்றுக்கொண்டு அவர் வழியில் தொண்டாற்றியவர். 1903 ஆம் ஆண்டு சுழிபுரத்தில் குருபூசை மடமொன்றினை தனது சொந்தச் செலவில் கட்டியதுடன், அறுபத்து மூன்று நாயன்மாருக்கும் குருபூசை வழிபாடுகளை நடத்தி சைவம் தழைக்க வழியமைத்தவர். இம்மடமானது யாழ்ப்பாணத்தின் முதலாவது குருமடம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. 1942 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.